அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி இயக்கம் கொண்டவர். நம் நாட்டில் வளர்ந்துவிட்ட சமூக சீர்கேட்டுக்கு காரணமான அரசியல், கட்சி, கொள்கை, கட்சித்தாவல், சந்தர்ப்பவாதம், வாக்குறுதி, இலவசம், மது, முகஸ்துதி, வன்முறை, லஞ்சம், ஊழல், விவாகரத்து... என பல பொருள்களில் ‘எங்கே போகிறோம் நாம்?’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகின்றன. ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்!
Be the first to rate this book.