ராஹுல் பண்டிதாவுக்கு, அவரது குடும்பத்தோடு ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டை விட்டுப் போக நிர்ப்பந்திக்கப்பட்டபோது வயது பதினான்கு. அவர்கள் காஷ்மீர் பண்டிதர்கள். 1990இல் இந்தியாவில் இருந்து 'விடுதலை' (Azadi) என்னும் கூச்சல்களால் படிப்படியாகக் கிளர்ச்சி அடைந்த ஒரு முஸ்லிம்-பெரும்பான்மைக் காஷ்மீருக்குள் இருந்த இந்து சிறுபான்மையினர்.
‘Our Moon Has Blood Clots’, (எங்கள் நிலவின் நிறம் சிவப்பு) காஷ்மீரின் கதையில் சொல்லப்படாத அத்தியாயம், அங்கே இலட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிதர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சித்ரவதைக்கு உட்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய வீடுகளை விட்டுப் போக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் எஞ்சிய வாழ்க்கையை, அவர்களின் சொந்த நாட்டிலேயே, நாடு கடத்தலில் கழிக்குமாறு தண்டிக்கப்பட்டனர். பண்டிதா, வரலாறு, சொந்த மண் மற்றும் இழப்பு பற்றிய ஓர் ஆழமான சுய, வலிமைமிக்க, மறக்கமுடியாத கதையை எழுதி இருக்கிறார்.
Be the first to rate this book.