‘எங்கள் ஐயா’ வாசிக்கையில் உண்டான புதுப் பரவசம் ஒருபக்கம்; நான் விடைபெற்று வெளியேறி வந்து ஆண்டு பலவான வகுப்பறையின் பழைய ஞாபகங்களின் தாக்கம் மற்றொரு பக்கம். நின்று நின்று வாசித்தேன். ‘எங்கள் ஐயா’ என்ன வகையான நூல்? ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மிக அவசியமான பாடப்புத்தகம் இது. ‘உளவியலைச் செயல்முறை வடிவில் காட்டியவர் எங்கள் ஐயா’ என்று அவருடைய மாணவர்கள் சொல்வது மிகச் சரி. ஆசிரியர் மாணவர் உறவின் விசாலங்களை அறியவும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் வடிவமைக்கப்பட்ட ஒருவகைச் சிற்ப நூலும்கூட இது. அதுவும் எப்படிப்பட்ட வடிவில்? விழுங்கக் கடினமான தியரிகளின் வடிவிலா? இல்லை. அரைத்த விழுதாக அனுபவங்களின் வடிவில் கிடைக்கிறது. சாறு எடுத்துக் குடிப்பதில் என்ன சங்கடம்?
-பேராசிரியர் ச. மாடசாமி
Be the first to rate this book.