திருநெல்வேலி மாவட்டம்,குற்றாலம் அருகிலுள்ள இடைக்கால் என்ற சிற்றூரில் பிறந்தவர் இசை ஆய்வாளர் திரு. நா. மம்மது.தற்போது மதுரையில் வசித்து வருகிறார். தமிழிசைப் பேரகராதி சொற்களஞ்சியம், தமிழிசை வரலாறு, ஆதி இசையின் அதிர்வுகள், தொல்லிசைச் சுவடுகள் உள்ளிட்ட ஏழு ஆய்வுகள் நூல்களை எழுதியவர்.
இது அவருடைய எட்டாவது ஆய்வுநூல். தமிழிசைப் பேரகராதி பண் களஞ்சியம் (100 பண்களின் ஒலிக்குறுந்தகடு), தமிழர் திணைக் கண்ணோட்டம், தமிழர் சூழலியல் களஞ்சியம் மூன்றும் அடுத்து வெளிவரும் நூல்கள். தமிழக அரசினரின் பாரதியார் விருது, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் அளித்த முத்துத்தாண்டவர் இசைவிருது, கவிஞர் கவிஞர் சிற்பி விருது உள்ளிட்ட பதினாறு விருதுகள் பெற்றவர். 70 வயது நா.மம்மது, தற்சமயம் மதுரை தியாகராசர் கல்லூரி, தமிழ் இசை ஆய்வு மையத்தில், முதன்மை இசை ஆய்வாளராக இருந்து வருகிறார்.
Be the first to rate this book.