‘இனயம் துறைமுகம்’ புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத்தெரிகிறது. படகோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு கிடைத்தற்கரிய தகவல்களை நமக்குத் தருகிறது. முக்குவர்களின் பண்டைய வரலாறுகளை கேரளா சார்ந்த ஆய்வுகளிலும், இலங்கை சார்ந்த ஆய்வுகளிலும் படித்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் சென்னப்பட்டினம் உருவான காலத்திலேயே முக்குவர் மக்களின் வரலாறு இருந்திருக்கிறது என்பதை இந்தக் கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது.
மறைக்கப்பட்ட வரலாறுகளை மிகவும் சிரமப்பட்டு நுட்பமான ஆய்வுகள் மூலம் வெளிக்கொண்டுவந்திருக்கும் ஆசிரியருக்கு முக்குவர் சமூகம் எப்போதும் கடன்பட்டிருக்கும். இந்தப் புத்தகம் மக்களுக்கு ஒரு தரவுக் களஞ்சியமாகவும் அறிவுச் சொத்தாகவும் இருக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அதற்காக இந்தப் புத்தகம் தந்த நண்பர் கிறிஸ்டோபர் ஆன்றணியை உச்சிமுகர்ந்து வாழ்த்துகிறேன்.
- குறும்பனை சி. பெர்லின்
Be the first to rate this book.