பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். அவரது துணிவின் காரணமாகவும் அகிம்சை மீதான அர்ப்பணிப்பு காரணமாகவும் இந்திய மக்கள் அன்போடு அவருக்கு எல்லை காந்தி என்று பெயரிட்டனர். அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு கான் இன்னும் நம்மோடு இருக்கிறார்கள். ஆனால் புதிய தலைமுறையினருக்கு அவர் எங்கோ தொலைவில் இருக்கின்ற வரலாற்றுப் புள்ளியாக, அதிகம் கவனிக்கப்படாதவராகத் தெரிகிறார். இம்மனிதரின் சிறப்பியல்புகளை அவர்கள் அறிய நேரிட்டால், அந்த மின்னும் ஒளிவிளக்கின் கீற்றுகள் அவர்கள் மீது விழுமேயானால், அவர்கள் இருலிளிருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்வர்.
தன வாழ்நாள் முழுவதும் அகிம்சைப்பாதையின் மீதும் இஸ்லாம் மீதும் அசையா நம்பிக்கை கொண்டிருந்தவர் எல்லைக் காந்தி. இஸ்லாமையும் அகிம்சையையும் இணைத்தார். தனது புனிதப்போராட்டத்தில் எதிரிகள் மட்டுமே ஆயுதம் ஏந்தியிருக்கின்றனர் என அவர் கூறுவதுண்டு.
தனது ஆவேசமான உரைகளால் மக்களை ஈர்த்த அவர் பஷ்டூ மொழியில் மிகச் சிறப்பாக உரையாற்றக் கூடியவர். இந்தியத் துணைக் கண்டத்திலேயே மொழி அடிப்படையில் தேசிய இன விடுதலைக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிய முதல் மனிதர். அவரது தாய்மொழிப் பற்று அளப்பரியது. தன் வாழ்க்கையை மானுடத்திற்காக அர்பணித்தவர். தன் இலட்சியத்தில் இறுதிவரை பிடிப்போடு செயல்பட்டு 98-ஆம் வயதில் மறைந்தார்.
Be the first to rate this book.