வில்லியம் ஸ்லீமெனின் 'எனது பயணங்களும் மீள்நினைவுகளும்' என்ற நூல் இந்த இரண்டாம் தொகுதியுடன் நிறைவு பெறுகிறது. மொகலாயக் கட்டடக் கலையின் பெருமிதங்களாகத் திகழும் தாஜ்மகால், குதுப்மினார் மற்றும் அக்கால மசூதிகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஸ்லீமெனின் பயணம் தொடர்கிறது. தைமூரின் படையெடுப்பு, ஆங்கிலேய அதிகாரி ப்ரேஸரின் கொலை போன்ற வரலாற்று நிகழ்வுகளை எழுதும் ஸ்லீமென் அரசு மேற்கொள்ள வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் பற்றியும் பேசுகிறார். சமஸ்தானங்களின் முடிவற்ற சண்டைகள், மக்களைச் சுரண்டும் நிலச்சுவான்தார்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள் பற்றிய ஸ்லீமெனின் எழுத்தில் பத்தொன்பதால் நூற்றாண்டு இந்தியா அச்சமும் துயரமும் நிரம்பிய ஒரு நாடாகத் தென்படுகிறது.
Be the first to rate this book.