சிலுவைப் போருக்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பியக் கிறித்தவர்களுக்கு இஸ்லாத்தின் மீதான வெறுப்பு முகிழ்க்கத் தொடங்கிவிட்டது. சிலுவைப் போர் அந்த வெறுப்பை நிலைப்படுத்திவிட்டது. இன்றுவரை அந்த வெறுப்பும் அருவருப்பும் இஸ்லாத்தின் மீதும், ஏகத்துவத்தின் மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் மனத்தில் தலைமுறை தலைமுறையாய் வேரூன்றி வருகிறது.
இந்த நிலையில்தான் பிரபல அய்ரோப்பிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லியோ போல்டு அரபியப் பாலைவன நாடுகளில் நுழைகிறார். அந்த மக்களிடம் பழகுகிறார். அரபிய இஸ்லாமிய கலாச்சாரத்தை நுகர்கிறார். இஸ்லாத்தில் கரைந்து போகிறார். சவுதி மன்னர் முதல் சாதாரண அரபு ஒட்டக ஓட்டி வரை இசைவுடன் அவரோடு பழகுகின்றனர். அல்லாஹுத்தஆலாவின் பேருதவியோடு Road to Makkah என்கிற இந்தத் தன்வரலாற்றுக் காவியத்தை இயற்றி முடித்தார்.
இந்த நூல் ஐரோப்பிய அறிவாளிகளின் மனத்தில் இஸ்லாம் பற்றிப் படர்ந்திருந்த அறியாமை இருளை முழுமையாக நீக்கியது. ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அரபியர் பற்றியும், இஸ்லாமிய வாழ்நெறி பற்றியும் உலகம் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்துச் செய்திகளின் நேரடி அனுபவ அறிவிப்பாகத் திகழ்கிறது இந்நூல்.
- டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
Be the first to rate this book.