ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அறியப்பட்ட அய்யனார் ஈடாடி, எனது சரித்திரம் கதைத் தொகுப்பின் வாயிலாகக் கதை சொல்லியாகவும் மிளீர்கிறார்.
அய்யனார் ஈடாடியின் கதைக்களமும் கதைமாதர்களும் வேளாண் மரபோடு பிணைந்திருந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியல் பாடுகளைப் புலப்படுத்துகின்றன. நிலமும் வாழ்வுமாகக் கிடந்த வேளாண் மாந்தர்கள் எளிமையானவர்கள்; எந்தப் பாசாங்கும் அப்பிக்கொள்ளாதவர்கள் அவர்களைக் குறித்துக் கதைச் சித்திரங்களாக விரியும் எனதூர் சரித்திரத்தின் கதைமொழியும் எடுத்துறைப்பும் எளிமையும் வெள்ளத்தியும் நிறைந்தவை.
தம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் கடந்தகால வாழ்வியல் கோலங்களைக் கதைகளுக்குள் உயிர்ப்பித்து, தமதூர் சரித்திரமாகம் படைத்திருப்பதோடு, மதுரை வட்டார இலக்கிய மரபை இன்னும் வலுவுடையதாகவும் ஆக்கியிருக்கிறார்.
தமிழ் இலக்கிய மரபிற்குத் தமது பங்களிப்பைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் அய்யனார் ஈடாடி இன்னும் வளர்வார்; மிளிர்வார். வாழ்த்துகள்.
முனைவர் ஏர் மகாராசன்,
Be the first to rate this book.