வலுவானவர்கள் எழுதுவதுதான் வரலாறு’ என்ற கூற்றை மாற்றியமைக்க கியூபா முயன்றிருக்கிறது. அதில் வெற்றியும் அடைந்திருக்கிறது. வெற்றியடைய மன உறுதியும், தன்னம்பிக்கையும், இடைவிடாத போராட்டமும் தேவை என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்கிறது. சிறு நாடுகளை அடக்கி ஒடுக்க முயலும் பெரும் நாடுகளுக்கு கியூபா புகட்டும் பாடம் மற்ற சில நாடுகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
ஒரு நாட்டிற்கு நல்ல தலைவன் மட்டுமல்ல, நல்ல மக்களும் அவசியம் என்பதை கியூபா புரிய வைக்கிறது. ‘கியூபாவில் ஒவ்வொருவரும் இன்று வரலாறு படைக்கிறார்கள். சிரமங்கள் அதிகமாக கியூபா மக்களிடம் நல்ல குணம் அதிகமாகிறது’ என்று ஃபிடல் கேஸ்ட்ரோ கூறுவது ஒரு தலைவன் தன் நாட்டு மக்களை அலாதியாக நம்புவது தெரிகிறது.
சாதாரணப் பார்வையில் பயணக் கட்டுரைகள் வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகளுக்குச் சென்று அங்கே சுற்றிப் பார்த்த இடங்களையும், கேளிக்கைகளையும், உண்ட உணவுகளையும் பற்றி எழுதுவது என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் மோகன் எழுத்து அதை மாற்றியமைத்திருக்கிறது. கியூபா புரட்சி, அங்குள்ள மக்களின் வாழ்க்கை, எண்ணங்கள், உணர்வுகளை தான் அங்கே தங்கியிருந்த சில நாட்களின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதி இருக்கிறார். சிறிய நூலானாலும் விரிவான பார்வையைக் கொண்டது.
Be the first to rate this book.