எனக்கு நிலா வேண்டும் என்ற இந்த நாவல் ஒரு லட்சிய நடிகையின் போராட்டக் கதை. அவளுடைய போராட்டம் ஒரு இருமுனைப் போராட்டம் கதாநாயகி வர்ஷா வசிஷ்ட ஒரு பெண் என்ற முறையில் தன் குடும்ப – சமூக அமைப்புகளோடும், கலை உலகின் பிரதிகூலமான சூழல்களோடும் போராட நேர்கிறது. ஒரு நடிகை என்ற முறையில் அவள் தன் அறிவாலும், கலைத்திறனாலும் கலை உலகின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி சிகரத்தை அடைய முயற்சி செய்கிறாள். இவற்றுடன் கதாநாயகி வர்ஷா வசிஷ்டிற்கும் அவளுடைய காதலன் ஹர்ஷவர்தனுக்கும் இடையே நிகழும் போராட்டங்களும் இணைந்து இந்தப் போராட்டக் கதையை நிறைவு செய்கின்றன.
Be the first to rate this book.