தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளை தனது பார்வையாலும் மொழியாலும் அசாதாரணமானதாக, பிரத்தியேகமானதாக மாற்றிவிடக் கூடியவன் என்பதற்கு அவரது இந்தப்பத்திகள் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. சாருவின் இந்தப் பத்திகளின் மைய ஓட்டமாக இருப்பது எங்கும் இடையறாது பெருகும் அபத்தமே. எண்ணற்ற கோணல்களும் பிறழ்வுகளும் கொண்ட அபத்தம் இது. இந்த அபத்தத்தை அவர் விமர்சிப்பதோ ஆவணப்படுத்துவதோ இல்லை. மாறாக அவர் அதை கேளிக்கையாகவும் பரிகாசமாகவும் மாற்றுகிறார். அதுவே இந்தக் கட்டுரைகளை உற்சாகமுடன் வாசிக்கத் தூண்டுகிறது.
Be the first to rate this book.