யாத்திரை என்றவுடன் எல்லோருக்கும் கல்யாணத்தில் நடக்கும் காசி யாத்திரைதான் ஞாபகம் வரும். அந்த காலத்தில் தேசாடனம், யாத்திரை போன்ற வார்த்தைகளுக்கு இருந்த மதிப்பே தனி. இன்று கிட்டத்தட்ட யாத்திரை என்ற நொல்லே மதிப்பை இழந்து விட்டது. காரணம் பயணம் என்பது இன்று ஒரு விஷயமே இல்லை. அதேபோல் 500 கி.மீ. 1000 கி.மீ. எல்லாம் ஒரு தூரதமும் இல்லை. இப்படி இருக்க நான் எதை யாத்திரை என்று கூறப்போகிறேன் என்று பலரும் நினைக்கலாம். எனது யாத்திரை என்பது பாதயாத்திரையை குறிப்பதாகும். இன்று நடப்பது என்பதும் ஒரு அபூர்வ விஷயமாகி விட்டது.எனவேதான் நடப்பு காலத்தில் பாத யாத்திரை அனுபவம் எல்லோருக்குமே ஒரு வித்தியாசமான விஷயமாக உள்ளது.
Be the first to rate this book.