வாசிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டும் இந்த நினைவலைகளின் தொகுப்பு நூலில், இந்திய, வம்சாவளியைச் சேர்ந்தவரும் சிங்கப்பூரின் அதிபராக இருந்தவருமான எஸ். ஆர். நாதன், தன் வாழ்க்கைக் கதையைச் சொல்கிறார். வறுமையான சூழலில் பிறந்து, கல்வி வாய்ப்பை இழந்து, பிற்காலத்தில் தானாகவே கல்வி கற்று, நாட்டின் மிக உயர்ந்த அதிபர் பதவியை எட்டிய வாழ்க்கைப் பயணத்தில் தான் சந்தித்த அனுபவங்களை விளக்குகிறார். இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்ற நம்பிக்கையோடு எழுதப்பட்டுள்ள இந்நூல் சிங்கப்பூரின் வரலாற்றையும், உலக அரசியல் நிகழ்வுகளையும், உலக அரங்கில் சிங்கப்பூரின் முன்னேற்றத்தையும் விளக்குகிறது. புகைப்படம் போலவே அனைத்தையும் துல்லியமாக சித்திரிக்கும் கோட்டோவியங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. உள்ள உறுதி இருந்தால் யாரும் முன்னேறலாம், என்று காட்டும் இந்நூல் இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நூலாகும்.
Be the first to rate this book.