வாழ்க்கை எனபது பரம்பத விளையாட்டு அல்ல. தாயக்கட்டையில் விழுகிற எண்ணுக்கு ஏற்றமாதிரி ஏணியில் ஏறி பாம்பில் சரிந்து ஆடுவதல்ல வாழ்க்கை.
தற்செயலாக நடப்பதையெல்லாம் அப்படியே ஏற்று, ஆறு போகிற போக்கில் தானும் மிதக்கிற கட்டையாக வாழ்வது வாழ்க்கை அல்ல. நம் வாழ்க்கை நம் கையில். நாம் வரும்புகிறபடி வாழ்வோம். அதை இனிமையானதாகவும் நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகவும் வாழ்வோம். இதற்கு நமக்கு உதவும் பத்துக் கட்டளைகளை உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கிறது. அந்தப் பத்து ஏன், எதற்கு, எப்படி என்று சொல்வதே இந்த நூல்.
Be the first to rate this book.