வளர்ந்து வரும் இந்தியாவில் தங்களுக்குரிய பங்கைப் பெறுவதற்கான விழிப்புணர்வும் முனைப்பும் உழைப்பும் அதன் விளைவாக ஈட்டிய ஓரளவு வெற்றியும் வடகிழக்கிந்தியர்களிடம் இருக்கிறது. சட்டியின் அடியில் ஒட்டி வரும் கரிப்பிசுக்கு போல வளர்ச்சியினடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மேலாதிக்கத்தை அடையாளங்கண்டு கொள்கின்றனர். இவை யனைத்தும் அவர்களிடம் இருக்கும் பழங்குடி தன்னுணர்வு, கிறிஸ்துவம், நவீன கல்வி என்ற மூன்று காரணிகளின் விளைவாகத்தான் சாத்தியமாகியுள்ளது.
*****
பயணங்கள் நம் அகக் கண்களைத் திறக்கின்றன. தனிமையிலும் சோர்விலும் சிக்கித் தவிக்கும் வாழ்விற்கு வாசிப்பு மற்றும் பயணத்தின் வழியேதான் விடுதலை கிடைக்கின்றது. பூட்டப்பட்டிருக்கும் ஒரு சாளரத்தை ஒவ்வொரு பயணமும் புத்தகமும் திறக்கிறது. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.
இந்தியா எப்போதும் என் நினைவுகளுக்கும் உணர்வுகளுக்கும் நெருக்கமாய் இருக்கும் நாடு. அதன் ஊர்களும் மனிதர்களும் இலக்கியங்கள் ஊடாகவும் திரைப்படங்கள் மூலமாகவும் மனதுக்கு நெருக்கமாய் இருக்கின்றன.
மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சில பிரதேசங்களுக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தியப் பெருநிலப்பரப்பில் ஒரு ரயில் பயணத்தில் தூங்கி எழுந்ததும் பண்பாடு, மொழி என எல்லாமே மாறிவிடுகிறது. புத்தம் புது அனுபவங்கள் தண்டவாளங்கள்போல நீண்டு கொண்டே செல்கிறது.
பஷீர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் குறுக்காகவும் நெடுக்காகவும் பயணப் படுபவர். பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பயண அனுபவங்களைப் பதிவு
செய்திருக்கிறார்.
Be the first to rate this book.