ஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு படம் பார்க்கும் தரை பெஞ்சு டிக்கெட் சுதந்திரம், எல்லா வியர்வையின் வாசத்தையும் பேதமின்றிச் சகித்தபடி, "சோடா, கலர், டீ, காப்பி, முறேக், பாட்டுப் புஸ்தேம்" வரிசைகளுக்கிடையே நுழைந்து நுழைந்து நடமாடும் வியாபாரக் கூவல்கள், படம் துவங்கும் மணி ஒலி, கவியும் இருள், கண நேர அமைதி, படச்சுருள் ஓடத் துவங்கியதும் புரொஜக்டர் அறையிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றை, அதில் படலம் படலமாய் ஊடுருவும் பீடி சிகரெட் புகை, வெண்திரையில் எழுத்துக்கள் விழத் துவங்கியதும் தங்கள் நாயக நாயகியர் பெயருக்கு எழும் கொட்டகையைப் பிளக்கும் கைதட்டு, விசில் சத்தம், ஒளி உருவங்களாக மாறும் விந்தையில் தங்களை மறந்து சிரிக்கும், அழும், நவரசமும் கொட்டும் ரசிகர்... என அந்தக்காலத் தமிழ் சினிமாவை எப்படி மக்கள் வாழ்வின் பகுதியாக உள் வாங்கிக் கொண்டார்கள் என்பதை அசலாகப் படம் பிடித்து அற்புதமான சினிமா ஆவணக் கட்டுரைகளாக, சுதந்திரமான வாழ்க்கைச் சிறகடிப்பில் உதிரும் அழகான இறகுகளாகத் தந்திருக்கிறார் கலாப்ரியா.
Be the first to rate this book.