எனக்காகச் சற்று நேரம் ஒதுக்குங்கள்
மனம் விட்டுப் பேச நமக்கு நேரம் இருப்பதில்லை நாடுகின்றோம், ஓடுகின்றோம், ஓடிக்கொண்டே இருக்கிறோம், சாவில் வெறுமைதான் மிச்சம். ஆனால் எப்படிப்பட்ட பரபரப்பான சூழலிலும் சில உரிமைகளை மட்டும் நாம் இழக்கக்கூடாது, அவற்றில் முக்கியமான ஒன்று நாம் பேசும் மொழியாகும். மொழி ஒருவரின் தனிப்பட்ட அடையாளமாகும். ஒவ்வொரு மனிதனும் போற்றிக் காக்க வேண்டிய ஒன்று அவன் பேசுகின்ற மொழியாகும். உவமையாகச் சொல்ல வேண்டுமானால் இன்று நம்மிடையே உள்ள பல்வேறு பேதங்களை நீக்கினால் இறுதியாகத் தமிழர் என்ற ஒரே ஒரு அடையாளம் மட்டுமே காணப்படும். அதுதான் உண்மை அடையாளமும்கூட, மற்றவையெல்லாம் தமிழ்ச் சமூகத்தினுள்ளே புகுத்தப் பட்டவையே.
கடல் கடந்து சென்றாலும் நம்மை அயல் நாட்டினர் பார்க்கும் பார்வை இரண்டு விதமே ஒன்று தமிழர், மற்றொன்று இந்தியர் என்பதே. எனவே மொழி என்பது நமது அடையாளம் அதனை ஒருபோதும் இழக்கக் கூடாது. இதனை நன்கு அறிந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் "சிந்தனைத் திறத்தை வளர்த்து வளப்படுத்தத் தாய்மொழி தெரிந்திருந்தும் அதன் பெரும் ஆற்றலை அறியாதவனாக இருப்பது கொடுமை” என்றார், எனவேதான் அவர் “உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் என் தாய்மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. அந்தத் தமிழ் மொழி மற்ற எந்த மொழிக்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும் வரை நான் அமைதி பெற மாட்டேன்'' என்று மாநிலங்களவையில் முழங்கினார், அதற்காக அயராது உழைத்தார்.
ஆனால் இன்று எத்தனை பேர் தமிழைத் தங்கள் உயிருக்கு இணையாக நேசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
Be the first to rate this book.