ஒருபக்கம் கோயில் தர்மகர்த்தாவாக பணியாற்றி கோயிலுக்குக் கோபுரம் எழுப்பும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார். இன்னொரு பக்கம் தம் நாடகங்கள் திரைப்படமாக வெளிவரத் துணையாக இருக்கிறார். பிறிதொரு பக்கத்தில் ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து சிவாலயச் சிற்பங்கள் என்னும் நூலை எழுதியுள்ளார். மற்றொரு பக்கத்தில் வானொலியின் வருகையை ஒட்டி, அதன் தேவைக்குத் தகுந்தபடியான நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார்.
அவருடைய ஆளுமை மகத்தானது. சாதிப்பெயரோடு இணைத்து ஒருபோதும் தான் கையெழுத்து போட்டதில்லை என்றும் ‘நமது தேசம் ஐக்கியப்படுவதற்கு தற்காலம் உள்ள ஜாதிபேதங்களெல்லாம் அறவே ஒழியவேண்டும்’ என்றும் அவர் இச்சுயசரிதையில் எழுதியுள்ள குறிப்புகள் முக்கியமானவை.
- பாவண்ணன்
Be the first to rate this book.