என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா? அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்? உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எத்ற்கும் பயன்படாதா? பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன? விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது? சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?
Be the first to rate this book.