சீனாவில் முதல் கொரோனா தொற்று ஆரம்பிக்கையில் தொடங்கும் நாவல் சமகாலத்தின் அரசியல் நிகழ்வுகள், சமூக ஊடக அரசியல், சுதந்திரமான ஊடகவியலாளர்கள். திரைத்துறைப் பின்னணி, உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் அதிகார மையம், உலகை ஆளும் எண்களின் கதை... என கோவிட் தொற்றுப் பேரழிவின் பின்புலத்தில் எல்லாவற்றையும் இணைத்துச் செல்கிறது.
அஸாஞ்சே, துருவ் ரதீ போன்ற தனி மனிதர்கள் அடிக்கின்ற விசில் சப்தம் எப்படி ஓர் எதிர் சுழலை வீரியத்துடன் செயல்படுத்துகிறது என்பதைப் புரிய வைக்கும் முயற்சிதான் இந்தக் கட்டியங்காரன்.
திரைப்படத்தைப் போல அதிவேகமாகச் செல்லும் கதையோட்டத்தோடு அதிர்ச்சிகரமான தகவல்களைப் பின்னணியில் வைத்து சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட நாவல்.
Be the first to rate this book.