கண்கள் , மிகவும் மென்மையானவை ; பாதுகாக்கப்பட வேண்டியவை. ஒரு சிறு கோளாறு என்றாலும் கண் பார்வையே போய்விடக்கூடிய நிலைதான். ஆனால், மற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் போல் அல்லாமல், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மிகவும் எளிதாகவும், அதிகச் செலவு இல்லாமலும் செய்துகொள்ளக் கூடிய ஒன்று. இதன்மூலம், போன கண் பார்வையை மீண்டும் கொண்டுவர முடியும்.
கண்ணிண் அமைப்பு எப்படி இருக்கம் ? பார்வை என்றால் என்ன? கண்களில் பதிவாகும் காட்சிகளை மூளை எப்படி உணர்ந்து கொள்கிறது ? கண்களில் வரும் பாதிப்புகள் என்னென்ன? அவற்றைச் சரிசெய்யும் சிகிச்சை முறைகள் என்னென்ன? கண்களைப் பாதுகாப்பது எப்படி? கண்தானம் என்றால் என்ன? கண் வங்கியின் முக்கியத்துவம் என்ன?என்பது போன்ற கண் தொடர்பான பல தகவல்களை, சாதாரண மக்கறும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் டாக்டர் கே. ஆனந்தகண்ணண்.
Be the first to rate this book.