அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து லட்சத்தீவுகள் வரை; லடாக்கிலிருந்து தென்கோடித் தமிழகம் வரை தன் பயணங்களின் வழி பார்த்து அறிந்தவர் வானதி. ஒவ்வொர் ஊரிலும் உள்ள மக்களோடு உறவாடி, உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இயன்றவரையில் அவர்கள் மொழி பேசி, அவர்கள் உணவுகள் உண்டு, ஓரிரு நாள்களேனும் அவர்களாகவே வாழ்ந்து பாரதத்தின் பாரம்பரிய அணுக்களை அனுபவத்தால் அறிந்தவர். அதற்கு சாட்சி இந்த நூல். படிக்கும்போதே மனதில் காட்சிகளாக விரியும் வண்ணம் எழுதிக்கொண்டு போகிறார் வானதி. ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றி எழுதும்போதும் அதன் இயற்கை அமைப்பு, வரலாறு, வெட்பதட்பம், அங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள், அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அவர்கள் கைவினைத்திறம், உணவு, கோயில்கள் என அனைத்தையும் சுவையாக விவரித்துக்கொண்டு போகிறார். இந்த நூல் இந்தியா மொழியால், மதத்தால், உணவு, உடை போன்றவற்றால் பன்முகத்தன்மை கொண்டது. ஆனால் கலாசாரம், உணர்வுகளால் ஒன்றாகப் பின்னிப் பிணைந்த ஒரு நாடு. செப்பும் மொழி பதினெட்டு உடையாள். எனில் சிந்தனை ஒன்றுடையாள். பாரதியின் எண்ணத்தைப் பொன்னெழுத்துகளில் எழுதி நிறுவுகிறார் வானதி.
- மாலன்
Be the first to rate this book.