தமிழ் இலக்கிய வெளி கட்டற்றதாக விரிந்து இயங்கத்தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. குறிப்பாகக் கவிதைகளின் அனைத்துத் தன்மைகளும் தமிழில் தகர்க்கப்பட்டு அதன் போக்கில் காட்டாறு போல ஓடுகின்றன. “அற்ப ஆயுள் கொண்டதானாலும், மகத்தானதானாலும், கவிதை ஒரு செயல்பாடு என்றே நம்புகிறேன்” என்கிற பாப்லோ நெரூதாவின் சொல்லைப்போலக் கவிதை செயல்பாட்டை வரவேற்போம்.
“வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது” என்று நிக்கனார் பாரா என்ற சிலி கவிஞர் கூறியிருப்பதுபோல தனித்தன்மையோடு உருப்பெற்று வருகிற கவிதைகளின் இருப்பு காலத்தால் உறுதிசெய்யத்தக்கது என்று நம்புகிறேன்.
தோழர் இரா.மணிவேல் பல தளங்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக ‘எம்பிரானின் கோயில் புக்கு’ என்னும் இந்த நூல் வெளியாகிறது. விரிவான வாசிப்பும் ஆழமான சமூக நேசிப்பும் உடைய மணிவேல் கவிதை வெளியில் தனக்கென ஓர் இடத்தை கண்டடைவார் என்ற நம்பிக்கையோடு வாழ்த்தி வரவேற்கிறேன்.
Be the first to rate this book.