சில நாவல்களை வாசிக்கிறோம். சில பகுதிகள் மனதில் நிற்கின்றன. வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மற்றொன்றுடன் அதை தொடர்புபடுத்திக் கொள்கிறோம். அவ்வளவுதான். ஆனால் வெகுசில நாவல்களே நம்மை புதைகுழி இழுப்பது போல் மொத்தமாக உள்ளிழுத்துக் கொள்கின்றன. நாம் மூச்சு விட முடியாது திணறுகிறோம். சுகவேதனையை அனுபவிக்கத் தொடங்குகிறோம். நாவலை வாசித்து முடித்ததும் நெருங்கிய உறவினரைப் பிரிந்த துயரை அடைகின்றோம். அப்படி ஒரு நாவலிது.
மும்பையின் மத்தியதர வாழ்க்கை பின்னணியில் வருகின்றது. கத்தோலிக்க மதம் எப்படி தனிமனித உறவுகளில், உரிமைகளில் குறுக்கிடுகிறது என்பதற்குச் சில நிகழ்வுகள் வருகின்றன. ஒரு எழுத்தாளர், தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையில் அடையும் உச்சம் என்பது ஒன்றுண்டு. பிண்டோவுக்கு இந்த நாவல். கண்ணையன் தட்சிணாமூர்த்தி மிகத்தெளிவாக, எளிமையாக எல்லோரும் விரும்பிப் படிக்கும் வண்ணம் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இந்த நாவலைத் தவற விடாதீர்கள்.
நன்றி; சரவணன் மாணிக்கவாசகம்
Be the first to rate this book.