எம்மொழிக்கும் மூத்தவளே! எம்மொழியாய் வாய்த்தவளே! செம்மொழியாய் மொழிகளுக்குள் செம்மாந் திருப்பவளே!
நயந்த மொழிகளிங்கு நாலாயிர மிருந்தும் உயர்ந்தவளே! உன்னைப்போல் உயிர்மெய்யோ டிருப்பவர் யார்?
வாயின் சுவாசமே! வைதாலும் தித்திக்கும் காயாத கனிச்சுவையே! காதருந்தும் கள்ளே!
எம்மொழி செம்மொழி எனக்கேட்டால், தலைநிமிர்ந்து எம்மொழி செம்மொழி எனச்சொல்லும் புகழ் கொடுத்தாய்
அகம் நீ! புறம் நீ! எம் ஆருயிரும் நீ! எங்கள் முகம் நீ ! முகவரி நீ! முடியாத புகழும் நீ!
Be the first to rate this book.