உலகப் புகழ்பெற்ற தத்துவவியலாளர் நீட்ஷேவின் புத்தகங்கள் தமிழில் அரிதாகவே வந்துள்ளன. அதற்கு முக்கியக் காரணம் அவரது ஆழமான தத்துவக் கோட்பாடுகள்.
எல்லாம் மானுடமே என்ற கோட்பாட்டின் வழியே, மனிதர்களின் எண்ணங்களை, ஆசைகளை, குறிக்கோள்களை அடைய அவர்கள் செய்யும் முயற்சிகளைப் பகுப்பாய்வு செய்கிறார் நீட்ஷே.
நீட்ஷேவின் தத்துவங்கள் முதலில் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தாலும், புரிந்தபின் ஏற்படும் திறப்பு அளவற்றதாகும். நம்மை நாம் புரிந்துகொள்வதற்கான தெளிவை அவரது எழுத்துகள் அளிக்கின்றன.
இலகுவான தமிழில் வானதி மொழிபெயர்த்திருக்கும் நீட்சேவின் இந்தப் புத்தகம், நாம் அறிந்த மற்றும் அறியாத கேள்விகளுக்கான பதில்களாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Be the first to rate this book.