திருமதி. சௌந்தரா கைலாசம் அவர்கள் -
இஸ்லாமிய மார்க்கத்தின் ஏற்றத்தைக் கூறுகிறார்.
வல்ல இறைவனைச் சொல்லில் வடிக்கிறார்.
கதீஜா நாச்சியாரைக் கௌரவப்படுத்துகிறார்.
ஆயிஷா நாயகியின் அருமைகளைக் கூறுகிறார்.
பாத்திமா நாயகியின் பண்புகளைப் போற்றுகிறார்.
இஸ்லாம் இந்த உலகிற்கு ஈந்த -
பெண்ணுரிமையிலும், மனித நேயத்திலும்
பெருமிதம் கொள்கின்றார்!
“எல்லை இல்லா அருளாளா!
இணையில்லாத அன்புடையோய்!
அல்லாஹ் உன்றன் திருப்பெயரால்
அன்பர் நாங்கள் ஓதுகிறோம் ...!”
என்று தொடங்கும் போதே, தொழுகைப் பள்ளியில் நுழைவதைப் போல் நம் உள்ளங்களைக் கவிஞர் உணர வைத்து விடுகிறார்.
“எவர்க்கும் இறைவன் பிறக்கவில்லை!
எவரையும் ஈன்று தரவில்லை!”
என்று இறைவன் யார் என்பதை அற்புதமாய் விளக்குகிறார்.
சௌந்தரா கைலாசம்
Be the first to rate this book.