ஆசிரியர்: கோட்டாறு தேவாமிர்தப் பிர்சங்கக் களஞ்சியம் மகா மதி. சதாவதானி கா.ப.செய்குதம்பி பாவலர்
1907ம் ஆண்டு சென்னை சூளை டி. கோபால் நாயகர் அவர்களது கோல்டன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் 108 ஆண்டுகளுக்கு பின்னர் மறுபதிப்பாக கோவை விஜயா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
எல்லார்க்கும் பார்க்கத் தகுந்த எட்டுக் கிரிமினல் கேஸ்' என்கிற சதாவதானி செய்குதம்பிப் பாவலரின் புத்தகம் வித்தியாசமானது. ருசிகரமானது. அரிச்சந்திர சரித்திரம், சூர்ப்பனகை பங்கம், வாலி வதம், இலங்கா தகனம், அரம்பைப் பலவந்தப் புணர்ச்சி, கோபிகா ஸ்திரீகள் வஸ்திராபரணம், திரெüபதை வஸ்திராபரணம், கீசகன் பலவந்தம் என எட்டு புராண இதிகாச நிகழ்வுகளை ஒரு நீதிமன்றத்தில் வழக்காடும் பாணியில் சுவாரஸ்யமான கற்பனை உரையாடல்களுடன் எழுதி இருக்கிறார் செய்குதம்பிப் பாவலர்.
1907இல் பதிப்பிக்கப்பட்ட புத்தகம் இது. அன்று, எந்தவிதமான மதக் காழ்ப்பும் இன்றி, இந்து சமயத்தவரின் எதிர்ப்புகளுக்கு ஆளாகாமல், இதிகாச புராண கதாபாத்திரங்களை நேர்மையுடன் பாவலரால் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரிக்க, விமர்சிக்க முடிந்திருக்கிறது.
Be the first to rate this book.