எது எப்படியிருந்தபோதிலும் நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினாள். இதிலொன்றும் அதிசயமில்லை. நாகம்மாளை அர்ப்ப ஆயுள்காரி என்று யாரும் சொல்லிவிடமுடியாது. நாகம்மாளுக்கு 48 வயதே ஆனபோதிலும் அதுமனித ஆயுளில் பகுதிக்கே சிறியதும் குறையான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ்நாளாகிய இருபத்து மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்லவேண்டும்.
செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழுக வேண்டும் என்கின்ற ஞான மொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல், அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருதவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல், அதை உண்மையென்றும் கருதுகிறேன்.
- குடியரசு தலையங்கத்தில் தந்தை பெரியார்
Be the first to rate this book.