சித்தர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எளிய கதைகள் மூலம் விளக்குவதுடன் சித்தர்கள் பற்றிய வரலாற்றையும் இணைத்துத் தருகிறது இந்தப்புத்தகம்.
நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அந்த வாசனையைமனோரஞ்சிதப் பூவில் நுகர முடியும் என்பார்கள். அதுபோலவே, சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவம் தருபவை.
குற்றாலத்தில் பகலில் மரமாகஇருப்பவை எல்லாம், இரவில்சித்தர்களாக மாறும் என்பார்கள். சித்தர்களை மரத்துடன் ஒப்பிடுவதில் தப்பில்லை. வேர், பூ, காய், கனி, இலை, கிளை என்று ஒவ்வொரு பகுதியும் உபயோகமானதாக இருக்கும் மரத்தைப்போலவே, மனித குலத்தை நல்வழிப்படுத்துவதற்காகத் தங்கள் உடல், பொருள்,ஆவி அனைத்தையுமே முழுமையாக அர்ப்பணித்தவர்கள் சித்தர்கள்.
Be the first to rate this book.