திருமுறையை ஆழமாகப் பயில வேண்டும் என்ற ஆசையை என்னில் விதைத்தவர், என் திருமுறை ஆசிரியர் பெரும்பாண நம்பி திரு. மா.கோடிலிங்கம் அய்யா அவர்கள். ஓர் ஆசிரியராக ஒரு பாடலை அவர் படித்துக்காட்டும் அழகும், அதன் பொருளை விளக்கும் விதமும், பண்ணோடு பாடிக்காட்டும் முறையும் அழகானதாக இருக்கும். சுமார்பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவரிடம் பயின்ற பதிகங்கள் பொருள் புரிந்து கற்றதால்தான் இன்றளவும் மறக்காமல் மனதில் இருக்கின்றன.
இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் திருமுறையில் உள்ள பல செறிவான பாடல்களை இன்றைய தலைமுறையினர் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டவை. உலகெங்கும் திருமுறை பயிலும் / பயில ஆசைப்படுகிறவர்களில் ஒரு சிலராவது ஆழமான இலக்கியச் சுவை வேண்டி, திருமுறையில் உள்ள செய்யுள்களைப் புரிந்துகொள்ள முயல்வார்களானால் அவர்களுக்கு ஒரு சில பாடல்களின் வழியே திருமுறையின் இலக்கியச் சுவையை எடுத்துக்காட்டுவதே இந்த நூலின் நோக்கம்.
- வித்யா அருண்
Be the first to rate this book.