ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாய பிரச்சனைகள் என்கிற மூன்று நூல்களைக் கொண்ட நூற்தொகுதி ரகுமான் ஜான் அவர்கள் தொகுத்து, வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்த நூல்களுக்குள் நுழையமுன்னர் நூலின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் குறித்து இந்நூலிலேயே தரப்பட்டுள்ள அறிமுகத்தைப் பார்ப்போம்,
ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக செயற்பட்டவர். விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி போன்ற பல அமைப்புகளினூடாக தொடர்ந்த இவரது அரசியல் பயணத்தில் கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தவர். உயிர்ப்பு, வியூகம் ஆகிய கோட்பாட்டு இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். இப்போதும் தொடர்ந்தும் உரையாடல்களை நடத்திக்கொண்டிருப்பவர்[i].
இந்த அறிமுகத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாக ரகுமான் ஜான் அவர்களை முன்னிலைப்படுத்தியதாக இந்த உரையாடலைக் கொண்டு செல்வது என் நோக்கமில்லை. அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது என்றும் விரும்புகின்றேன், ஆனால், ரகுமான் ஜான் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டுப் பிரச்சனைகள் நூலின் முன்னுரையில் குறிப்பிடுவது போல
“இந்தத் தொகுதியில் நான் “உயிர்ப்பு சஞ்சிகைகளில் வந்த அனைத்துப் படைப்புக்களையும் அவற்றுடன் கூடவே எமது அமைப்பினுள் படைக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களையும் எமது போராட்டத்தில் அக்கறையுள்ள ஆர்வலர்களதும் குறிப்பாக அடுத்த தலைமுறைப் போராளிகளதும் பார்வைக்காக முன்வைக்கிறேன். இதனைச் செய்யவேண்டும் என்று கடந்த காலத்தில் பலரும் வலியுறுத்தி வந்துள்ளபோதிலும் அப்போது இருந்த பல்வேறு காரணங்களினால் நான் அவ்வாறு செய்வதைத் தவிர்த்தே வந்துள்ளேன். ஆனாலும் ஒரு கட்டத்தில் புதியவற்றை படைப்பது என்பதைக் கடந்து இதுவரை படைத்தவற்றைப் பத்திரமாக அடுத்தவர்களுக்குப் பயன்படும் விதத்தில் கையளித்துவிடவேண்டும் என்ற சிந்தனை எழத் தொடங்குகின்றது. அப்படிப்பட்ட ஒரு தருணத்திலேயே இதனைத் தொகுக்கவேண்டும் என்ற முடிவுக்கும் நாம் வந்தாக நேர்கிறது.[ii]”
இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதிலும், பெரும்பான்மையாக உள்ள சிங்களத் தேசிய இனத்தால் ஏனைய தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்பதுவும் ஒடுக்கப்பட்ட மக்களால் உணரப்பட்டபோது அதற்கெதிரான போராட்டங்கள் எழுந்தன. இவ்வாறு போராடப் புறப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் இன ஒடுக்குமுறையுடன் சேர்த்து சாதிய, மத, மொழி, பாலின ரீதியான ஒடுக்குமுறைகளும் தொழிற்படும் விதத்தைக் கண்டறிந்ததுடன் இனங்களுக்கு இடையிலே நிலவுகின்ற முரண்களையும் / ஒடுக்குமுறைகளையும் கண்டுணர்ந்து ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் என்பது அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கவேண்டும் என்கிற சமூக நீதிக்கோட்பாட்டினை வந்தடைகின்றார்கள். அவ்வாறாக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அமைப்பாக்கம் பெற்று ஒன்று திரள்வதே விளைதிறன் மிக்கதாகும். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பதில் அதன் ஆரம்பக்கட்டங்களில் பங்கெடுப்பவர்கள் / முன்னெடுப்பவர்கள் பெரிதும் தன்னெழுச்சியுடன் அல்லது தன்னியல்புடனேயே வெளிக்கிளம்புவர். அவர்கள் ஒன்றிணைந்து அரசியல் பற்றிய பிரக்ஞையுடன் உரையாடி, கோட்பாடுகளின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து தெளிவுற்று அமைப்பாகிப் போராடுவது என்பது சற்றே மெதுவானதாகத் தோன்றினாலும் அதுவே நீண்டகால அடிப்படையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தவல்லது.
அமைப்பு வேலையொன்றின் நிமித்தமாக ஆரம்பநிலை அறிமுக உரையாடல்களுக்கான நூல்களைத் தேடிக்கொண்டிருந்தபோது ஜார்ஜ் தாம்சனின் நூலின் தமிழாக்கமாக ”மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை”, திருமாவளவன் எழுதிய ”அமைப்பாய்த் திரள்வோம்” ஆகிய நூல்களின் வரிசையில் வைத்து வாசித்து உரையாடவேண்டிய தொகுதியாக ரகுமான் ஜான் தொகுத்த இந்த நூல்களைக் குறிப்பிடுவேன். அந்த அடிப்படையில் இந்த நூல்களின் உள்ளடக்கத்தைப் பார்ப்போம்.
https://arunmozhivarman.com/2023/02/22/20230222/
5 மிக முக்கியமான நூல்
ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாய பிரச்சனைகள் என்கிற மூன்று நூல்களைக் கொண்ட நூற்தொகுதி ரகுமான் ஜான் அவர்கள் தொகுத்து, வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்த நூல்களுக்குள் நுழையமுன்னர் நூலின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் குறித்து இந்நூலிலேயே தரப்பட்டுள்ள அறிமுகத்தைப் பார்ப்போம், ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக செயற்பட்டவர். விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி போன்ற பல அமைப்புகளினூடாக தொடர்ந்த இவரது அரசியல் பயணத்தில் கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தவர். உயிர்ப்பு, வியூகம் ஆகிய கோட்பாட்டு இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். இப்போதும் தொடர்ந்தும் உரையாடல்களை நடத்திக்கொண்டிருப்பவர்[i]. இந்த அறிமுகத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாக ரகுமான் ஜான் அவர்களை முன்னிலைப்படுத்தியதாக இந்த உரையாடலைக் கொண்டு செல்வது என் நோக்கமில்லை. அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது என்றும் விரும்புகின்றேன், ஆனால், ரகுமான் ஜான் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டுப் பிரச்சனைகள் நூலின் முன்னுரையில் குறிப்பிடுவது போல “இந்தத் தொகுதியில் நான் “உயிர்ப்பு சஞ்சிகைகளில் வந்த அனைத்துப் படைப்புக்களையும் அவற்றுடன் கூடவே எமது அமைப்பினுள் படைக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களையும் எமது போராட்டத்தில் அக்கறையுள்ள ஆர்வலர்களதும் குறிப்பாக அடுத்த தலைமுறைப் போராளிகளதும் பார்வைக்காக முன்வைக்கிறேன். இதனைச் செய்யவேண்டும் என்று கடந்த காலத்தில் பலரும் வலியுறுத்தி வந்துள்ளபோதிலும் அப்போது இருந்த பல்வேறு காரணங்களினால் நான் அவ்வாறு செய்வதைத் தவிர்த்தே வந்துள்ளேன். ஆனாலும் ஒரு கட்டத்தில் புதியவற்றை படைப்பது என்பதைக் கடந்து இதுவரை படைத்தவற்றைப் பத்திரமாக அடுத்தவர்களுக்குப் பயன்படும் விதத்தில் கையளித்துவிடவேண்டும் என்ற சிந்தனை எழத் தொடங்குகின்றது. அப்படிப்பட்ட ஒரு தருணத்திலேயே இதனைத் தொகுக்கவேண்டும் என்ற முடிவுக்கும் நாம் வந்தாக நேர்கிறது.[ii]” இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதிலும், பெரும்பான்மையாக உள்ள சிங்களத் தேசிய இனத்தால் ஏனைய தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்பதுவும் ஒடுக்கப்பட்ட மக்களால் உணரப்பட்டபோது அதற்கெதிரான போராட்டங்கள் எழுந்தன. இவ்வாறு போராடப் புறப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் இன ஒடுக்குமுறையுடன் சேர்த்து சாதிய, மத, மொழி, பாலின ரீதியான ஒடுக்குமுறைகளும் தொழிற்படும் விதத்தைக் கண்டறிந்ததுடன் இனங்களுக்கு இடையிலே நிலவுகின்ற முரண்களையும் / ஒடுக்குமுறைகளையும் கண்டுணர்ந்து ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் என்பது அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கவேண்டும் என்கிற சமூக நீதிக்கோட்பாட்டினை வந்தடைகின்றார்கள். அவ்வாறாக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அமைப்பாக்கம் பெற்று ஒன்று திரள்வதே விளைதிறன் மிக்கதாகும். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பதில் அதன் ஆரம்பக்கட்டங்களில் பங்கெடுப்பவர்கள் / முன்னெடுப்பவர்கள் பெரிதும் தன்னெழுச்சியுடன் அல்லது தன்னியல்புடனேயே வெளிக்கிளம்புவர். அவர்கள் ஒன்றிணைந்து அரசியல் பற்றிய பிரக்ஞையுடன் உரையாடி, கோட்பாடுகளின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து தெளிவுற்று அமைப்பாகிப் போராடுவது என்பது சற்றே மெதுவானதாகத் தோன்றினாலும் அதுவே நீண்டகால அடிப்படையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. அமைப்பு வேலையொன்றின் நிமித்தமாக ஆரம்பநிலை அறிமுக உரையாடல்களுக்கான நூல்களைத் தேடிக்கொண்டிருந்தபோது ஜார்ஜ் தாம்சனின் நூலின் தமிழாக்கமாக ”மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை”, திருமாவளவன் எழுதிய ”அமைப்பாய்த் திரள்வோம்” ஆகிய நூல்களின் வரிசையில் வைத்து வாசித்து உரையாடவேண்டிய தொகுதியாக ரகுமான் ஜான் தொகுத்த இந்த நூல்களைக் குறிப்பிடுவேன். அந்த அடிப்படையில் இந்த நூல்களின் உள்ளடக்கத்தைப் பார்ப்போம். https://arunmozhivarman.com/2023/02/22/20230222/
Sutharshan Sirinivasan 19-12-2024 12:11 pm