ஈழத்தின் நிகழ்வுகள், தமிழகத்தின் எதிர்வினைகள் ஆகியவற்றை ஊடும் பாவுமாகக்கொண்ட தமிழ்நதியின் அரசியல் கட்டுரைகள் இந்நூல் முதல் பகுதி. ‘வேரிழந்து சென்றவர்கள், விழுதுகளுடன் திரும்பி வரும்’ அனுபவங்களையும் சொந்த மண்ணில் அந்நியவளாக பயணம் செய்யும் வலியின், அவமானத்தின் பதிவுகள் இரண்டாம் பகுதி. ஈழத்து அரசியல் நிகழ்வுகள் தொடர்பான இலக்கியப் பிரதிகளை அன்றைய அரசியல் சூழலில் பதித்து வாசிக்கும் இலக்கிய / அரசியல் விமர்சனங்கள் இந்நூலின் இறுதிப்பகுதி. புதிய தலைமுறை எழுத்தாளர்களில் அரிதாகவே காணக்கிடைக்கும் மொழிநடை, சொல்வளம், வீச்சு ஆகியன வாசிப்புக்கு மெருகேற்று கின்றன. தமிழ்த் தேசியப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் இத்தொகுப்பு ஈழப் பிரச்சனை பற்றிய விவாதத்தையும் மறுபரிசீலனையையும் தூண்டுவதாக அமையும்.
Be the first to rate this book.