இஸ்ரேல் : யூதர் என்ற ஒப்பீட்டை, ஈழம் : தமிழர்கள் என்றவாரு நிருவ முயலும் எழுத்துக்களும், பேச்சுகளும் அண்மை காலத்தில் அதிகரித்திருக்கின்றன. இதில் சில அடிப்படை உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி விரும்புபவர்களின் கோணம் என்பது பெரும்பகுதி தூய்மைவாத அரசியலில் இருந்தும், அமெரிக்க சார்பு நிலையில் இருந்தும் வெளிப்படுவதை காண்கிறோம்.
இத்தகைய அம்சங்களை உள்ளடக்கி கலையரசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகமானது, இஸ்ரேலும், ஈழமும் பொருந்திப்போகும் மற்றும் விலகிச் செல்லும் புள்ளிகளை வரலாற்று நோக்கில் அணுகுகிறது. இந்த பேசுபொருளை ஒரு மைய அச்சாகக் கொண்டு உலக அரசியலையும் ஆழமான நோக்கில் விவரிக்கும் இந்நூல் ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் உடனடி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!
உள்ளடக்கம்:
ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
யூதர்களுடன் முரண்படும் புலம் பெயர் தமிழர்கள்
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
இஸ்ரேலின் வாகரையும் இலங்கையின் காஸாவும்
பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
தமிழர்கள் ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம்: ஒரு மீள் பார்வை
பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?
இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்
கிறிஸ்தவ நாடுகள்(ஈழத்)தமிழரின் நேச சக்திகளா?
Be the first to rate this book.