இரண்டாயிரமாண்டு தமிழர் வரலாற்றில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தனித்துவமானது. ஆயுதமேந்திப் போராடிய ஈழத்து விடுதலை இயக்கங்கள் எதிர்கொண்ட வெற்றிகளும் தோல்விகளும் அளவற்றவை.தமிழின ஒடுக்குமுறையை இராணுவரீதியில் மேற்கண்ட சிங்கள பேரினவாத அரசினுடைய கோரமும் கொடூரமானது. இவ்விரு எதிரெதிர் முனைக்களுக்கிடையே சராசரியான ஈழத்தமிழரின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இத்தகைய பின்புலத்தில் ஈழத்தமிழரின் போராட்ட வாழ்க்கை குறித்த பதிவாக விளங்கிடும் இலக்கியப் படைப்புகள் பற்றிய இந்நூலானது, சமகாலத்தின் வரலாறாகவும் அரசியலாகவும் பதிவாகியுள்ளது.
Be the first to rate this book.