இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப்பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றிய தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன், ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும், ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன்.
இன்னமும்கூட எழுதவேண்டியிருக்கிறது. தெளிவத்தை ஜோசப் பற்றி எழுதிய கட்டுரைகள் உள்ளன. மு.தளையசிங்கம்,அ.முத்துலிங்கம் ஆகியோருக்குப்பின் ஈழ இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராகிய ஷோபா சக்தி குறித்து விரிவாக எழுதும் எண்ணம் உள்ளது. பிறிதொரு தொகுப்பாக அது அமையலாம்.
- ஜெயமோகன்
Be the first to rate this book.