எஸ். சண்முகத்தின் இக்கவிதைகளை வாசித்தலில் அகப்படும் இந்த ”அர்த்தங்களின் உபரி” என்பது கவித்துவ மொழிதலின் வழியாக சொற்களை அடர்வு மிக்கதாக மாற்றுகிறது. இக்கவிதைகள் நிலம்-பொழுதில் அல்லது கால-வெளியில் பிரசன்னமாகியிருக்கும்போதே, அதன் அர்த்த அழிவின் சுவடுகளும், அர்த்தங்கள் முழுமையுறா எச்சமும், முழுமையை அடையவியலா மிச்சமும் கவித்துவ பொருள்கொள்தலின் இன்மையாக மறைவியக்கம் கொள்கிறது. தத்துவரீதியாகச் சொன்னால் காதல் என்ற அகச்சொல்லாட்டத்தின் வழியாக இன்மையின் இருப்பை பேசித் தீராக் கவிதைகள் இவை.
- ஜமாலன்
Be the first to rate this book.