தன் வாழ்நாளில் மொத்தமாக 1,368 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார் எடிசன். எப்படி முடிந்தது அவரால்? சாதிக்கும் ஆவலைத் தூண்டும் ஒப்பற்ற கண்டுபிடிப்பாளரான எடிசனின் சாதனைச் சரித்திரம்.
உலகில் எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கையில் அடங்காத கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன், அவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் தனித்து நிற்கிறார்.
99% உழைப்பு, 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை மட்டுமே நம்பியவர் அவர். முறையாகப் பள்ளியில் சேர்ந்து பாடங்கள் பயின்றதில்லை. ஆனால், பின்னாளில் தானே ஒரு பல்கலைக்கழகமாக மாறினார்.
பொதுமக்களுக்குப் பயன்படாத எதையும் கண்டுபிடிக்கப்போவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டார் எடிசன்.
எடிசனின் சுவாரசியமான வாழ்க்கையையும் அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான கதைகளையும் எளிமையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.