காதல் கவிதைகளுடன் தொடங்கும் ஔவையின் இந்தத் தொகுதி கடந்துவிட்ட காலத்திற்கும் இனி கடக்கப்போகும் காலத்திற்கும் - வெறுமையும், அசைவும், இழப்பும், விழைவும் பின்னிப்பிணைந்துள்ள காலத்திற்கும் - இடையிலான காத்திருப்பைப் பேசுகிறது. போரின் அவலத்தையும், தாய்மையின் பரிவையும், சினத்தையும், ஆற்றாமையையும் இக்கவிதைகள் இணைத்துப் பேசும் பாங்கு அலாதியானது. கடந்தகால அரசியற்கனவின் சேதாரங்களுடன் இலங்கையில் தொடர்ந்து வாழ வேண்டிய
நிர்ப்பந்த சூழலில்தான் அவர் எழுதினார்.
இவ்வகையில் அவர் எழுதிய தருணங்களும், எழுதாத, எழுத இயலாத தருணங்களும் முக்கியமானவை.
இவற்றைக் கருத்திற்கொண்டு அவரது கவிதைகளை வாசிப்போருக்கு அவரது பயணம் புரிபடும்:
“இப்போது, இப்போதுதான் என்னை மீட்டு எடுத்திருக்கிறேன். அடக்குமுறைக்குள்ளிருந்தும் அச்சம் தரும் இருளிலிருந்தும் உணர்வுகள்
பிடுங்கி எறியப்பட்ட வாழ்விலிருந்தும் என்னை மீட்டுள்ளேன்.”
முன்னுரையிலிருந்து
Be the first to rate this book.