மொழி என்கிற தொடர்பு சாதனம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இங்கு நடந்துகொண்டிருக்கின்ற அறிவியல் புரட்சி எதையுமே நாம் பார்க்க முடியாமல் போயிருக்கும். அறிவியலின் வளர்ச்சிக்கு மொழி எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல ஒரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் அவன் பயன்பாட்டிற்கும் மொழி அவசியம். தாய் மொழியைத் தவிர பிற மொழிகளும் தெரிந்திருத்தல் சாலச்சிறப்பு. பிற மொழிகளைக் கற்கவேண்டிய, பேசவேண்டிய அவசியத்தை இன்றைக்கு அனைவரும் உணர்ந்திருக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே உலகப் பொதுமொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உலகெங்கிலும் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலை தமிழகத்திலேயே எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இதுவொரு ஆரோக்கியமான வளர்ச்சியாகவே கருதலாம். ஆங்கிலம் ஒரே மொழியாக இருந்தாலும், அது அமெரிக்கன் இங்கிலீஷ், பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று இரண்டு நாடுகளை மையப்படுத்தி உலகமெங்கும் இரண்டு விதமாக பேசப்படுகிறது. இந்த நிலையில் ஆங்கிலம் எழுத, பேச தெரிந்துகொள்வது இன்றியமையாதது என்றாகிவிட்டது.
Be the first to rate this book.