பெண் என்ற அடையாளத் தன்னிலையின் சொற்கள் இவை. காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி. ஒருவகையில் இது மிகுந்த சமகாலத்தன்மையுடையது. அதே சமயம் பெண்ணியம் என்ற கருத்தியலின் தீவிரத்தன்மையோ அதை உரத்துப் பேசும் தன்மையோ கொண்டவையும் அல்ல என்பதும் இந்தக் கவிதைகளின் அடையாளம். சமூக மனிதத் தன்னிலையைவிட தனிமனிதத் தன்னிலையிலிருந்து வெளிப்படுபவை. கவிசொல்லியின் அகம் உள்முகமாக திரும்பி அமர்ந்தலின் கவிதைகள் என்று இவற்றை வரையறுக்கலாம். இந்தக் கவிதைகளின் வடிவம் சிக்கலற்றது. எளிமையானது. எளிய சொற்களின் வழியாக மன உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்தும் கவிதைகள் இவை. இப்படி நேரடியான சொற்களின் வழியாக தன் கவித்துவத்தை கண்டடையும் கவிதைகளும் நம் சமகாலப் போக்காகவே இருக்கிறது. அந்தவகையில் தமிழ் கவிதைப் பெருந்திரட்டின் மைய நீரோட்டத்தில் தன் படைப்புகளையும் இணைத்துக்கொள்கிறார் ஜான்சி ராணி.
- இளங்கோ கிருஷ்ணன்
Be the first to rate this book.