நேர்மைக்கும் கடமைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் கதைதான் துரோணருடைய கதையும். பாண்டவர்களை வீழ்த்த வேண்டும் என்றும், துரோணர்தான் களத்தில் மற்ற வீரர்களைவிடச் சிறந்தவர் என்று தெரிந்தும் துரியோதனன் அவரை குரு படையின் தளபதியாக நியமிக்கிறான். தன்னுடைய நடத்தையின் மீது தமக்குள் பொங்கும் அருவருப்பு உள்ளூர அவரைக் குத்திக் கொன்றாலும், அந்தத் தலைசிறந்த ஆசான் போர்க்களத்தில் இரண்டு அக்ஷௌஹினி வீரர்களைக் கொன்று குவித்தார். தனது உயிரை தானே துறந்துகொண்ட துரோணரின் உயிரில்லா உடலிலிருந்து தலை திருஷ்டத்யும்னனால் துண்டிக்கப்படுகிறது.
எதிர்காலம், தற்காலத்தைப் போலவும் கடந்தகாலத்தைப் போலவும், வெறுமையாகத்தான் தெரிகிறது. ஒரு சாபம் சபிக்கப்படுகிறது. அமைதிகூட இன்னும் மௌனமாகிறது. இப்படித்தான் பாலா, நம் இதிகாசக் கதைகளுக்குத் தனக்குரிய தனி பாணியில், புதிய ஒரு பரிமாணம் கொடுக்கிறார். அந்த அற்புதமான கதைகளைத் தற்காலத்திற்கேற்ப அழகாக வடிவமைக்கிறார். அவர் எழுத்துகளிலும், தயாரிப்புகளிலும் பெரிய பலமாகத் தென்படும் அந்த “மினிமலிசம்” - மிக எளிமையான நடை. ஆனால், அதில் ஒரு ஆழம், அமைதி. ஆனால் அதில் ஒரு குமுறல். அவரின் படைப்புகளில் அவ்வப்போது தென்படும் கவிதைகளைப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அதே சமயம், மேடையில் அரங்கேறும் நடனமும் காண அழகாக இருக்கும். இவை அனைத்தையும் விடவும் மிக முக்கியமானது, சமகால இந்திய நாடக உலகில் பாலா ஒரு முக்கியமான நாடக ஆசிரியரும், இயக்குனருமாவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
சுரேந்திரநாத் சூரி
இயக்குனர், நாடக ஆசிரியர்.
Be the first to rate this book.