பிரட்டும், சோறும், பட்டாணிக் கூட்டும், உருளைக்கிழங்கு ரோஸ்டும், பப்படமும், ரோஜா சர்பத்துமாக வரிசையாக எடுத்து விளம்பினாள் அவள். வறுத்த மீன் துண்டு ஒன்றை எடுத்துக் கடித்தபடி வேணுமா என்றாள். இது மட்டும் வேணாம் என்றேன். ‘வேறே என்ன வேணும்?’ சாப்பிட்டபடி என்னைப் பார்த்துச் சிரித்தாள். மீனை வாயில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டு, எதுக்கு பிடுங்க, அது பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டு அப்படியே அந்த உதட்டில். ‘வேணாம், நீ என்ன நினைக்கறேன்னு தெரியுது.’ ‘ஷெ தெய்மா’ என்றேன். பிரஞ்சில் ‘ஐ லவ் யூ’ சொல்ல வாழ்க்கையில் முதல் தடவையாகக் கிடைத்த சந்தர்ப்பம் அது.
Be the first to rate this book.