இயற்கையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் அல்லது மனித வரலாற்றைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் அல்லது நமது அறிவு செய்யும் வேலைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எதைப் பார்த்தாலும் நம் முன்னே தெரியும் முதல் காட்சி என்ன? பரஸ்பர உறவுகளும் வினைத் தொடர்புகளும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டும் சர்வ வியாபகமான ஒரு வலைப் பின்னலைப் போன்றதொரு காட்சிதான் முதலில் தெரியும். இந்தப் பரஸ்பர உறவுகள் வினைத் தொடர்புகள் எதுவும் முன்னிருந்த உருவத்திலோ, முன்னிருந்த இடத்திலோ ஒரு பொழுதும் இருப்பதில்லை. எல்லாம் இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றன. எல்லாம் தோன்றிக்கொண்டும் மறைந்து கொண்டும் இருக்கின்றன.
- எங்கெல்ஸ்
Be the first to rate this book.