இருபதாம் நூற்றாண்டின் தமிழகத்தின் அதிசயம் திராவிட இயக்கம். இந்த இயக்கம் தமிழர்களையும், தமிழ் இலக்கியங்களையும் அதிர வைத்து தட்டியெழுப்பியது.
பல்வேறு இன்னல்களைத் தாங்கி அதன் தலைவர்களும் இயக்கத் தோழர்களும் திராவிட இயக்கத்தைக் கட்டிக்காத்து வருகின்றனர்.
தமிழை எளிதாக பயிலவும், கற்கவும் எழுதவும் பத்திரிக்கையாளர் என்ற முறையில் அச்சுப் பொறிக்கு ஏற்ப எழுத்துக்களை மாற்று வடிவத்தில் உருவாக்கினார் பெரியார்.
திராவிட இயக்கத்தார் திருக்குறளைப் பகுத்தறிவு நூலாகப் பார்த்தனர். திருக்குறளை மக்கள் மயமாக்கியது.
வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கி பொதுவெளியில் பேச வைத்தது.
சமஸ்கிருதம் மற்றும் தமிழ் பேராசிரியர்களுக்குள் காணப்பட்ட ஊதிய முரண்பாட்டைச் சமமாக்கித் தந்தவர் தந்தை பெரியார்.
தமிழர்களுக்குள் இன உணர்வை ஊட்டி தன்மான உணர்வைத் தந்தது.
1948 ஆம் ஆண்டில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.
பெண்ணியக் கல்வி (அ) மகளிரியல் கல்வியை வளர்த்து பெண்களுக்கு முன்னேற்றம் கண்டது.
முன்னூறுக்கும் மேற்பட்ட இதழ்களின் மூலம் இயக்கக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மக்களிடையே கொண்டுச் சென்றது.
வரதட்சணைக் கொடுமையும், சாதிய இழிவும் நீங்க சுயமரியாதைத் திருமணங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியது.
தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை ஆனால் தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி.
சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் என இன்னும் ஏராளம்! ஏராளம்!!
இந்நூல் 138 கட்டுரைகளைத் தாங்கி நின்று திராவிட இயக்கத்தின் தமிழ் மற்றும் சமுதாயப் பணிகளைப் பட்டியிலிடுகிறது.
Be the first to rate this book.