தந்தை பெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? நிச்சயம் இல்லை! இங்கு ஒரு தலைவர் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்குமான பதிலை அத்தலைவரின் கொள்கையைப் பின்பற்றுவோர் புத்தகமாக வெளியிட்டுருப்பார்கள் எனில், அத்தலைவர் தந்தை பெரியார் மட்டுமே. பெரியார் மீது தமிழ்த்தேசிய வாதிகளால் வைக்கப்படும் விமர்சனங்களுக்கான ஆதாரபூர்வமான பதில்கள் இப்புத்தகத்தில் உள்ளன. இந்துத்துவ ஆதரவாளர்கள் போலவே, போலித் தமிழ்த்தேசிய வாதிகளும், விமர்சனங்களுக்கான பதில்களை ஏற்பதுமில்லை, அதை சான்றுகளுடன் மறுப்பதுமில்லை. மாறாக அவர்களிடமிருந்து மிஞ்சுவது அவர்கள் மனதில் ஊறிப்போன கொச்சை வார்த்தைகள் மட்டுமே. தந்தை பெரியார், தனக்குச் சாதிப் பற்று, சமயப் பற்று, மொழிப் பற்று என்று எதுவும் இருந்ததில்லை எனவும், தான் விரும்புவது மனிதப்பற்று. அதுவும் வளர்ச்சியை நோக்கிய மனிதப்பற்று மட்டுமே எனத் தெளிவாக கூறியுள்ளார்.
Be the first to rate this book.