சுயமரியாதை இயக்கம் முன்வைத்த ‘திராவிடப் பெண்’ என்பவள் தனித்து சுயமரியாதையுடன் இயங்கக் கூடியவள். சாதி,மதம், பண்பாடுகளில் உள்ள அடிப்படைவாத விழுமியங்களைத் தகர்த்து, எவ்வகையிலும் எந்தவொரு அடிப்படைவாதக் கருத்தியலுக்கும் அடிபணியாது, சுயமதிப்புடன், பகுத்தறிவு கொண்டு, தன்னுடல் மீதான முழு உரிமையுடன், இந்த உலகம் அனைவருக்குமானது என்ற சமூகப் பிரக்ஞையுடன் நேர்கொண்ட பார்வையில் பயனிப்பவளாவாள். அதாவது ‘திராவிடப்பெண்’ என்பவள் இந்த நவீன உலகிற்கானவளாவாள்.
Be the first to rate this book.