வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமையான உழைப்பின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன.
திராவிட அரசியல், கம்யூனிச அரசியல் போன்றவை, தமிழர்களிடம் நாடகக் கலைகள் ஊடாக பரவிய விவரம் விவரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரிட்டிஷ் ஆட்சியில் நாடகங்களுக்கு இருந்த தடை பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. நாடகக்கலை, கலகங்களை எதிர்கொண்டு எப்படி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்பதை, நுட்பமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அனைத்து பதிவுகளும் ஆதாரங்களுடன் உள்ளன. தமிழக வரலாற்று உருவாக்கத்தில் நாடகக்கலை ஏற்படுத்திய கலகங்களையும், நாடகக்கலை எதிர்கொண்ட கலகங்களையும் பதிவு செய்துள்ள முக்கிய புத்தகம்.
- அமுதன்.
Be the first to rate this book.