வன்முறை இன்றி மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் பற்றிய விரிவான முதல் ஆய்வு இது. மத மறுப்பில் தொடங்கி மதச் சகிப்புத்தன்மைவரை திராவிட அரசியல் பெற்றுவந்த மாற்றங்களையும் நூலாசிரியர் பதிவு செய்கிறார். தேர்தல் புள்ளிவிவரங்கள், செய்தித்தாள்கள், கட்சிகளின் துண்டுப் பிரசுரங்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகளுடனான நேர்காணல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல், இனம் சார்ந்து மக்களை அணிதிரட்டுகையில் சகிப்புத் தன்மையையும் ஜனநாயக உணர்வையும் கட்சித் தலைவர்களும் குடிமக்களும் எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதையும் காட்டுகிறது. திராவிட இயக்கங்களின் கோட்பாடுகளையும் வெகுசன அரசியலையும் அவற்றின் பன்முகப் பரிமாணங்களுடன் புரிந்துகொள்வதற்கு உதவும் நூல் இது. அபாரமான வாதங்களும் அபரிமிதமான ஆதாரங்களும் கொண்ட இந்த நூல் அரசியல் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பலனளிக்கக் கூடியது. வெகுமக்களியத்தின் உலகளாவிய ஆற்றலைப் புரிந்துகொள்வதற்கான அணுகுமுறையை நரேந்திர சுப்பிரமணியன் முன்வைக்கிறார். வெகு மக்களியம் குறித்த உலக அளவிலான ஒப்பாய்வில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள முக்கியத்துவத்தை இது தெளிவுறக் காட்டுகிறது. டேவிட் லட்டன், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்
Be the first to rate this book.